news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு
tv

Also Watch

tv

Read this

கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு

ரஃபேல் போர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரஃபேல் போர் விமானங்கள்

விமானப்படையின் வலிமையை வலுப்படுத்த அரசு திட்டம் :

விமானப்படையின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரான்சிடம் இருந்து கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, 36 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படைக்காக வாங்கப்பட்டுள்ளன. புதிதாக வாங்கும் 114 ரஃபேல் விமானங்களில், 90 விமானங்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார் :

7 தமிழர்கள் உட்பட 66 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ என மொத்தம் 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த சிவசங்கரி, விஜயகுமார் ஐபிஎஸ், டாக்டர் ஹெச்.வி.ஹண்டே உள்ளிட்டோரும் விருது பெற்றனர்.

"பாகிஸ்தான் பயங்கரவாதம் தான் இந்தியாவின் பெரும் கவலை" :

பாகிஸ்தான் மண்ணில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதம் தான் இந்தியாவின் பெரும் கவலையாக உள்ளதாகவும், அந்தக் கவலை நியாயமானது தான் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் என தெரிவித்தார்.

1,000 அடி பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்த சொகுசு கார் :

மகாராஷ்டிராவில் ஆயிரம் அடி பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 8 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராய்கட் மாவட்டம் அம்பேனாலி காட் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ரோப்வே கேபிள் காரில் சிக்கித் தவித்த 286 சுற்றுலா பயணிகள் :

ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்தில் இருந்து 500 ஆடி உயரத்தில் ரோப்வே கேபிள் காரில் சிக்கித் தவித்த 286 சுற்றுலாப் பயணிகளை பேரிடர் மீட்புப் படையினர் ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

குல்மார்க் கோண்டாலாவில் தொழில்நுட்ப கோளாறால் கேபிள் கார் பாதி வழியிலேயே நின்றது. இதனால், 65 கேபின்களில் இருந்த 286 பயணிகள் அந்தரத்தில் சிக்கி தவித்தனர்.

Related Link
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு

0
1 hr 7 mins agoshare
ரஃபேல் போர் விமானங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved