news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியாவின் பி.வி.சிந்து - இந்தோனேசிய வீராங்கனை மோதல்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் பி.வி.சிந்து - இந்தோனேசிய வீராங்கனை மோதல்

பி.வி.சிந்து

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு:

இன்று தொடங்கும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியுடன் மோதுகிறார்.

அதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்திய ஜோடிகள் களம் காண்கின்றன.

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி :

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை வழிநடத்தும் குழுவின் தலைவராக டேவிஸ் கோப்பை டென்னிஸ் கேப்டன் ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐ.ஓ.ஏ.-ன் செயற்குழு உறுப்பினராகவும், இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை ஸ்காட்லாந்தில் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் :

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென், சீனாவின் லு குயாங் சூவை உடன் மோதுகிறார்.

இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, கடந்தாண்டு உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற கனடாவின் விக்டர் லாயுடன் மோதுகிறார்.

ODI உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் ஆஸி. வீரர்கள் :

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராக திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

டிராவிஸ் ஹெட், ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் உலகக் கோப்பைக்கு பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதால் அடுத்த சீசனில் பெரும்பாலும் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

பெங்களூரு அணி - குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறும் முதல் பிளே ஆஃப் சுற்று போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Link
சரியான இடத்தில் துணிந்து நிற்க வேண்டும்

சரியான இடத்தில் துணிந்து நிற்க வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு

0
28 mins agoshare
ரஃபேல் போர் விமானங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved