news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ரூ.289 கோடி வசூலித்த சூர்யாவின் கருப்பு திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

ரூ.289 கோடி வசூலித்த சூர்யாவின் கருப்பு திரைப்படம்

கருப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கருப்பு

சூர்யாவின் கேரியரில் அதிக வசூலை குவித்த கருப்பு :

ஆர்.ஜே.பாலாஜி-சூர்யா கூட்டணியில் வெளியான கருப்பு திரைப்படம் உலகமுழுவதும் 289 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. திரைப்படம் வெளியான நாள் முதலே அரங்குகள் நிரம்பி வருவதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சூர்யாவின் சினிமா கேரியரில் அதிக வசூலை குவித்த திரைப்படம் கருப்பு என அவரது ரசிகர்கள் பெருமிதப்படுகிறார்கள்.

சூர்யாவுடன் கைகோர்க்கும் KVN தயாரிப்பு நிறுவனம்  :


விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்த KVN PRODUCTIONS தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக சூர்யாவின் 50ஆவது திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஜனநாயகனின் சென்சார் பிரச்னை தீர்ந்து விரைவில் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தடை :

பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க பிரபல நடிகர் ரன்வீர் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "டான் 3" திரைப்படத்திற்கு கூடுதல் சம்பளம் கேட்டும், சில காட்சிகளை மாற்றி அமைக்குமாறும் கூறி, விலகியதாக சங்கத்தில் புகார் அளிக்கப் பட்டதால், ஃபெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயீஸ் என்கிற பாலிவுட் திரைப்பட அமைப்பு தடை விதித்துள்ளது.

"மார்ஷல்" திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு :

நடிகர் கார்த்தியின் 49-வது பிறந்தநாளை ஒட்டி, "மார்ஷல்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தை, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக ஆதி பினிஷெட்டியும் நடிக்கின்றனர்.

"பரிமளா அண்ட் கோ" திரைப்படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் :

ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள "பரிமளா அண்ட் கோ" திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Link
'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்

'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு

0
27 mins agoshare
ரஃபேல் போர் விமானங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved