news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் கார் ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் கார் ஓட்டுநர்

கார் ஓட்டுநர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கார் ஓட்டுநர்

மாத சம்பள வேலையை விட்டு கார் ஓட்டும் நபர் :

ஹரியானா மாநிலம் குருகிராமில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வாடகை கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது.

Zypp Electric என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஆகாஷ் குப்தா, வாடகை காரில் பயணித்த போது, ஓட்டுநருடன் இந்த உரையாடலை நிகழ்த்தினார். மாதம் 25 ஆயிரம் ரூபாய் தரும் வேலையை விட்டு வாடகை காரை ஓட்டி மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பதாக பெருமிதமாக கூறினார்.

இதேபோல் ஐடி வேலையை விட்டுவிட்டு பெங்களூருவை சேர்ந்த பெண் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாக கூறியது கடந்த மாதம் வைரலாகியது.

ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த மஹிந்திரா பொலிரோ கார் :

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 7பேர் உயிரிழந்தனர். மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என ஆறு பேரும் ஒரு மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா பொலிரோ வாகனம் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கார் சுக்கு நூறாக நசுங்கி காரில் பயணித்தவர்கள் உயிரிழந்த நிலையில், பள்ளத்தில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

டெலிகிராம் & சிக்னல் செயலிகளைப் பயன்படுத்தியவர் கைது :

உத்தரகாண்டில் தீவிரவாதக் கொள்கையைப் பரப்ப டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளைப் பயன்படுத்தியவர் கைது செய்யப்பட்டார். உதம் சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்த முகமது சலாவுதீன் என்பவர் சமூக ஊடகத் தளங்கள் மூலம் தீவிரவாதக் கொள்கையைப் பரப்பியதாகவும், எல்லை தாண்டிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக வந்த ரகசிய தகவலின் பேரில் கண்காணிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவருடமிருந்த கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிபொருளை வெடிக்கச் செய்யும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானுக்காக மலேசியாவிலிருந்து செயல்படும் நபர் இவரைக் கையாண்டிருக்கலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Link
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லாரியில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

0
31 mins agoshare
வாக்குப்பதிவு இயந்திரங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved