news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews கேப்டன் சுப்மன் கில் 154 ரன்கள் எடுத்து அசத்தல்
tv

Also Watch

tv

Read this

கேப்டன் சுப்மன் கில் 154 ரன்கள் எடுத்து அசத்தல்

சுப்மன் கில்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுப்மன் கில்

170 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 402 ரன்கள் குவித்தது.

இஷான் கிஷன் 125 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 154 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 44.3 ஓவரில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ரஹ்மத்ஷா சிறப்பாக விளையாடி 79 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-க்கு 0 என இந்திய அணி கைப்பற்றியது.

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றி :

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 9.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா ஹோல் 45 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்தில் உள்ளன.

4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி :

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேச அணி, 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கூப்பர் கானலி 47 ரன்கள் எடுத்தார். ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-க்கு 1 என வங்கதேசம் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

Related Link
2027 ODI உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி

2027 ODI உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் கார் ஓட்டுநர்

0
1 min agoshare
கார் ஓட்டுநர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved