Also Watch
Read this
By: Manigandan Raja

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு?
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சம்பவ இடத்தில் கண்ணாடி பாட்டிலின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 11 நோயாளிகள் உயிரிழப்பு :

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஜெயதேவா அரசு இதய நோய் மருத்துவமனையில், ஒரே நாளில் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க டாக்டர்கள் இல்லை எனவும், சரியான சிகிச்சை கிடைக்காததால்தான் நோயாளிகள் இறந்ததாகவும் குற்றம்சாட்டினர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார் :

திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம், சபாநாயகரிடம் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved