news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் வெளியானது
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் வெளியானது

ட்ரம்ப்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph 1

ஹோர்முஸில் 30 நாட்களுக்குள் கப்பல் போக்குவரத்து :

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் முழுமையாக திறந்து 30 நாட்களுக்குள் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஈரானுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதேபோல, ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை நீக்கம், முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிப்பு போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பதிலுக்கு, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது என உறுதியளித்துள்ளது.

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா உதவும் :

இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா நிச்சயம் வந்து உதவும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், பிரதமர் மோடி இந்தியாவின் தலைவராக இருக்கும் வரை இந்த ஆதரவு நிச்சயம் தொடரும் எனவும், ஒருவேளை புதிய தலைவர் வந்தால் அதுபற்றி தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு நிலவி வருவதாகவும், இரு நாடுகளும் இதற்குமேல் நெருக்கமாக இருக்க முடியாது எனவும், இதுதான் மிகவும் உச்சபட்ச நெருக்கம் எனவும் தெரிவித்தார்.

Related Link
ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லாரியில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

0
2 mins agoshare
வாக்குப்பதிவு இயந்திரங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved