Also Watch
Read this
By: Srini Vasan

எச்சரிக்கை: இந்த செய்தி சங்கடத்தை தரலாம்
அறியல் ஆராய்ச்சியின் சில விநோத சம்பவங்களை நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இத்தாலியில் நடந்து இருக்கு.
எப்பொழுதும் மனிதனுக்கு புரியாத புதிராகவே இருப்பது மனிதனின் மரணம்தான். பிறப்பு தொடங்கி மரணம் வரை நடந்து வரும் ஆராய்ச்சிகள் ஏராளம். பல மில்லியன் ஆண்டுகளோ அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வாழ்ந்து, இறந்த மனிதர்களின் தொல்லியல் ஆய்வுகள் இன்றும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்தவகையில் இத்தாலியில் நடந்த ஒரு தொல்லியல் ஆராய்ச்சி கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கு.
இத்தாலியின் யூராக் ரிசர்ச் நிறுவனம் மம்மிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் பல நூற்றாண்டுகளாக புதைந்திருந்த ‘ஓட்ஸி தி ஐஸ்மேன்’ என்ற மம்மியின் உடலை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக மம்மியின் உடலை மட்டுமில்லாமல், அதன் உட்புறத்திலும், வெளியிலும் இருக்கும் நுண்ணுயிரிகளை சேகரித்து அதில் விநோதமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது மம்மியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளில் இருந்த நொதித்தல் தன்மை கொண்ட ஈஸ்டுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஈஸ்டுகளை பேக்கிங் செய்யும் மாவுடன் கலந்து ரொட்டி தயாரித்துள்ளனர். NDTV தகவலின்படி, மம்மியின் நுண்ணியிரியில் இருந்து எடுக்கப்பட்ட ஈஸ்ட் மூலம் தயாரித்த ரொட்டியின் சோதனை வெற்றியடைந்ததாகவும், அதை தொடர்ந்து மற்றொரு மம்மியான அந்த மனிதர் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததால் அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டனர், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர் என ஆய்வு தொடர்ந்து வருகிறது.

இதில் இன்னொரு கேள்வி என்னவென்றால் பல ஆயிரம் ஆண்டுகளாக கிடந்த மம்மியில் அந்த நூண்ணுயிரி எப்படி உயிருடன் இருந்தது என்பதுதான். அதற்கு, தற்போது ஆய்வு செய்து வரும் ஓட்ஸி பனிமனிதன், உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பழமையான இயற்கையாகவே பாதுகாக்கப்பட்ட மம்மி என்பதால், அவரின் உடலில் இருந்த நுண்ணுயிரிகள் அதீத குளிர்ச்சியால் உயிருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஓட்ஸி பனிமனிதன் இறந்த சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த நூண்ணியிரிகள் அவரது உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் குறித்த ஆய்வுக்கு ஆதாரமாக இருக்கும் ஓட்ஸி பனிமனிதனின் மம்மி பனிக்குள் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது. அதை 1991ல் கண்டறிந்த ஆய்வாளர்கள், அந்த மம்மியை வைத்து மனிதனின் பரினாம வளர்ச்சி குறித்த ரகசியங்களை தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved