Also Watch
Read this
By: Manigandan Raja

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு :
நடிகர் ஜீவா நடித்துள்ள "ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ஜீவாவின் 47-வது படமாகும்.
"சிவா மனசுல சக்தி" திரைப்படத்துக்கு பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வருகை :

"தி ஒடிசி" திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், நோலனுடன் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ், நடிகர்கள் டாம் ஹாலண்ட், மேட் டேமன் ஆகியோரும் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக நோலன் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளது. ஐமேக்ஸ் புக்கிங் ஆரம்பித்த உடனேயே "தி ஒடிசி" திரைப்படத்திற்கான டிக்கெட்கள் அசுர வேகத்தில் விற்றுத் தீர்ந்தன.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் :

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்தின் தந்தையாக சிவராஜ்குமார் நடிக்கிறார்.
படத்தில், யோக லட்சுமி, சிவானி நாகரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அப்பா - மகன் இடையேயான பாசத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved