Also Watch
Read this
By: Web Team

Chennai Rain: சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை
பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி மாலையில் அம்பத்தூர், புதூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர்,
பட்டரைவாக்கம், பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை
செய்தது. இடைவிடாது பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே பிரதான சாலை மழை நீரால் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு
உள்ளாகினர்.
சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் பள்ளம் மேடு தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved