news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news என் மகன் அரசியலுக்கு வருகிறாரா? - இபிஎஸ் சொன்ன உண்மை!
tv

Also Watch

tv

Read this

என் மகன் அரசியலுக்கு வருகிறாரா? - இபிஎஸ் சொன்ன உண்மை!

அதிமுகவின் அடுத்த தலைவர் இபிஎஸ் மகனா?

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EPS

ADMK EPS: தனது மகன் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விக்கு சட்டமன்றத்தின் வளாகத்திலேயே பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானதை தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் அதிமுக உறுப்பினர்களும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அடிக்கடி ஊடங்களில் என் மகன் மிதுன் அரசியலுக்கு வருவதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அது தவறு. என் மகன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. அதிமுகவில் அவர் எந்த பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை மீண்டும் அழுத்தமாகவும், திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன்.

வேண்டுமென்றே திட்டமிட்ட என் மகனை குறிப்பிட்டு அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் பொய் என்பதை நானே தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது தலைமையே காரணம் என்றும், கட்சி தொண்டர்களும், கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக உழைத்ததால் அவர் வெற்றி பெற்றார். ஓட்டுப்போட்ட மக்களையும், தொண்டர்களையும் விஜயபாஸ்கர் மதிக்காததால் அதற்கான பலன் அவருக்கு வரும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக, தவெக இடையே கனெக்சன் இருக்கு - உதயநிதி

8
1 hr 15 mins agoshare
பாஜக, தவெக இடையே கனெக்சன் என உதயநிதி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved