Also Watch
Read this
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
வெள்ளை அறிக்கை - ஆளுநர் பாராட்டு
சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை சாியில்லை, அதனை வெளிக்கொண்டு வரும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சியின் முறையற்ற செயல்முறையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு ஆளுநர் அர்லேகர் பாராட்டு தெரிவித்தார்.

ஆளுநர் அர்லேகர் வருத்தம்
அரசு முன்னதாக வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் பொிய தொகை வட்டியாக கட்டப்படுகிறது. தனி நபா் கடன், மாதாந்திர வட்டி தொகைகளை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் ஆளுநர் வருத்தம் தொிவித்தார்.
வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை
டாஸ்மாக்கில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் நிதி தமிழக அரசிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வருவாய் இழப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது; மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிதி பற்றாக்குறையை தாண்டி நிறைவேற்றப்படும்.
இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.

வந்தே மாதரம் இல்லை
தமிழக வெற்றிக் கழக அரசு பெறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடப்படுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடப்படவில்லை.
குழந்தையுடன் வந்த MLA
தமிழக வெற்றிக் கழக அரசு பெறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த திருவிக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி. 
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved