Also Watch
Read this
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

ஆளுநர் உரை
கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என்றும் சட்டமன்றத்தில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புகிறேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விசில் புரட்சி
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது; இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 1967, 1977ல் அண்ணா, எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய புரட்சி போல் 2026ல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளித்துள்ளது தவெக

தலைவர்களை குறிப்பிட்டு பேசிய ஆளுநர்
அம்பேத்கர், அண்ணா, பெரியார், காமராஜர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர்களை குறிப்பிட்டு ஆளுநர் உரையில் பேசினார்.

மத்திய அரசு பரிசீலிக்கும்
பெண்கள் நலன், குழந்தைகள் நலன், மாநில உரிமைகளை முன்னிறுத்தி இந்த ஆட்சி செயல்படும். கோவை, மதுரை, ஒசூரில் மெட்ரோ ரயில் திட்டம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மேகதாது அணை, மீனவா்கள் கைது தொடா்பாக முதலமைச்சா் விஜய் பிரதமாிடம் வைத்த கோாிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
இவ்வாறுஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved