news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிப்பு

அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் உயிர்மூச்சு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே என்ற பெயரில், கணக்காய்வு நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து விரைவாக முடிக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், முந்தைய அரசுகளின் தொடர்ச்சியாக, பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என ஆளுநர் உரையில் உறுதிதெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆளுநர் உரையுடன்...
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் கூட்டமாக, தமிழகத்​தின் 17ஆவது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார். அவர் கூறியதாவது;
பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக கொண்டு, சாதி, மத, பண அரசியலை தாண்டி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் விஜய்யால் மட்டுமே முடியும் என மக்கள் முடிவு செய்து தேர்தெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் விசில் புரட்சி
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது; இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 1967, 1977ல் அண்ணா, எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய புரட்சி போல், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் ஆட்சி அதிகாரத்தில், தவெக பங்கு அளித்துள்ளது.

தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு
ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் செலுத்தும் வரியில் இருந்து, தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிர்வினைப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். மாநில நலன் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழகத்துக்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். தமிழகத்துக்கான நியாயமான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதிசெய்யப்படும்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. தமிழகத்தில் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக உயர்ந்து உள்ளது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம். தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை இந்த அரசு மூடியுள்ளது.

மேகதாது விவகாரத்தில்...
கனிம வளத்துறையில் நடக்கும் ஊழல் மூலம், அந்த துறையின் வருவாய் குறைந்து உள்ளது. இயற்கை வளக் கொள்ளையை தடுத்து அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட நடவடிக்கைகள் தொடரும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்துக்கு உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு கொடுத்து வருகிறது.

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக மாற்ற அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.

சமூக நீதி சர்வே
முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தும். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிந்தவுடன், தமிழக அரசு சமூக நீதி சர்வே நடத்தும். மீனவர் பிரச்சினையை தீர்க்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும். 2031ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் மாறும். இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும்.
இவ்வாறு ஆளுநர் உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் உரையில் இடம் பெற்றவை..

* அரசு நிர்வாகத்தில் ஊழலுக்கு முடிவு
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல்
* விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி கடன் தள்ளுபடி

* விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்ப ஆதரவு
* இருமொழிக் கொள்கை தொடரும்
* தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு

* காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
* காவிரி உரிமைக்காக சட்டப்போராட்டம்
* முல்லைப் பெரியாறு உரிமையில் உறுதி

* மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
* கீழடி - ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
* 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

* தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்
* வறுமையற்ற தமிழகம் உருவாக்கம்
* 2031-க்குள் நகர்ப்புற வளர்ச்சியில் முன்னணி மாநிலம்
* அரசு நிர்வாகத்தில் AI (செயற்கை நுண்ணறிவு)
இவ்வாறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

Related Link

"வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவை"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக, தவெக இடையே கனெக்சன் இருக்கு - உதயநிதி

8
45 mins agoshare
பாஜக, தவெக இடையே கனெக்சன் என உதயநிதி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved