Also Watch
Read this
By: Srini Vasan

TN Assembly: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை நிரூபித்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது.
கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாத நிலையில் இம்முறை அந்த சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்பட்டது.
பின்னர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உரையை நிகழ்த்தினார். அப்பொது தற்போதுள்ள தவெக அரசின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களை ஆளுநர் அர்லேகர் தவறாக உச்சரித்தார்.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர், தனது தவறை உணர்ந்து அப்படிப்பட்ட உச்சரிப்புக்கு சட்டமன்றத்திலேயே அனைவர் முன்பும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved