Also Watch
Read this
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறி உள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து
காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதிலும் நான் உங்களுடன் உறுதுணையாக நிற்பேன்," என்று கூறி உள்ளார்.

திமுக தலைவர் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு , எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்," என்று பதிவிட்டு உள்ளார்.
தமிழிசை, கமல், ஜி.கே.வாசன் வாழ்த்து





© Copyright Newstamil 24x7 2026. All rights reserved