news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா கோலாகலம்

அரங்கக்குடி, மயிலாடுதுறை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தேர்த்திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடி மாதா கோவில் தெருவில் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 51-ஆம்
ஆண்டு தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, ஆலய பங்கு தந்தை அந்தோணி தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் மற்றும் சிறப்பு திருப்பலி செய்யப்பட்டு தேர் பவனி தொடங்கியது. தேர் பவனி விழாவில்
ஆரோக்கியமாதா, அந்தோணியார் மற்றும் சம்மனுசு மாதா ஆகிய 3 சொரூபங்கள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட 3 திருத்தேர்களில் எழுந்தருள செய்யப்பட்டு பேண்டு வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது.

வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்து தூப வழிபாடு செய்தும் பிரார்த்தனை நடத்தினர். தேர் பவனியில் கண்கவர் வானவேடிக்கை
அனைவரையும் கவர்ந்தது. விடிய விடிய நடைபெற்ற தேர்பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Link
பரதம் முடித்த மாணவிகளுக்கு சலங்கை பூஜை விழா

பரதம் முடித்த மாணவிகளுக்கு சலங்கை பூஜை விழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

1
1 hr 20 mins agoshare
Vijay orderbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved