Also Watch
Read this
By: Manigandan Raja

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த
பேனர் மர்ம நபர்களால் இரவோடு இரவாக அவிழ்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு வெற்றிக் கழக (தவெக) தொண்டர் சுகுமார், முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கொளக்காநத்தம் பகுதியில் பேனர் ஒன்றை வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் சிலர் அந்த பேனரை கிழிக்காமல், சேதப்படுத்தாமல் அவிழ்த்து மடித்து எடுத்துச் செல்லும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சுகுமார் இன்று காலை சுமார் 11 மணியளவில் மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, பேனரை அவிழ்த்து எடுத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved