Also Watch
Read this

லெபனான் நாட்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேஸ் படைகள் தொடர்ந்து இருப்பதை காரணம் காட்டி, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியதாக வெளியான தகவலுக்கு, ஈரான் அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

கப்பல் போக்குவரத்து தொடர்கிறது
அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்வதாக, ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி தகவல் தெரிவித்து உள்ளார்.

டெங்கு பாதிப்புக்கு இதுவரை 28 பேர் உயிரிழப்பு
இலங்கையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் நடப்பு ஆண்டில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கையின் பருவமழைக் காலத்தில் டெங்கு பரவுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் கடந்த நவம்பர் இறுதியில் அந்நாட்டைத் தாக்கிய 'டிட்வா' (Ditwah) புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவை இந்த ஆண்டு நோய்த்தொற்றின் தீவிரத்தை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த டெங்கு பாதிப்புக்கு 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜன்னல் வழியாக வெளியேற்றம்
டோக்கியோவில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து உள்ளே இருந்த குழந்தைகள் ஜன்னல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பள்ளியின் நான்காவது தளத்தில் அமைந்திருந்த இசை அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பள்ளியில் இருந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டதோடு காயமடைந்த ஒரு ஆசிரியர், 2 குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

2 ரயில்கள் மோதி விபத்து
லண்டனின் பெட்ஃபோர்டு அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்ததாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக எக்ஸ் பதிவிட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், மேலும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved