news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news "பிரதமர் மோடி உறுதியான தலைவர்"
tv

Also Watch

tv

Read this

"பிரதமர் மோடி உறுதியான தலைவர்"

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனா

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தான் தாம் போற்றும் உலகத் தலைவர்கள், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் தொழில்முறை மிக்கவர்- டிரம்ப்
பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அந்நாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பலவீனமான தலைவர் யார் என்பதை கூற மறுத்தார். மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தொழில்முறை மிக்கவர் என்றும், பிரதமர் மோடி உறுதியான தலைவர் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

தானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் - மெலோனி
தன்னுடன் ஃபோட்டோ எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் என்றும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்பட்டமாகப் பொய் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் மெலோனி கருத்து தெரிவித்து உள்ளார். நட்பு நாடுகளின் தலைவர்களிடமே இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் எனப் புரியவில்லை என்றும் இத்தாலி பிரதமர் மெலோனி வேதனை தெரிவித்தார்.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பணிகள் தொடக்கம்
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் பணியை சீனா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வெறும் 50 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்படும் இந்த அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என இரு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Related Link
குரங்கில் இருந்து வந்தவன் அல்ல மனிதன், நவீன உயிரியல் தரும் அதிர்ச்சி விவரம்

குரங்கில் இருந்து வந்தவன் அல்ல மனிதன், நவீன உயிரியல் தரும் அதிர்ச்சி விவரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 22062026

3
54 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 22062026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved