news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news "நான் முதல்வன் சாதனைகளை அழிக்க முடியாது" -மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

"நான் முதல்வன் சாதனைகளை அழிக்க முடியாது" -மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

"இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்"

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
"நான் முதல்வன் சாதனைகளை அழிக்க முடியாது" -மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

தமது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மக்கள் மனங்களில் இருந்து...
இதுதொடர்பாக, திமுக தலைவர் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
நீங்கள், நான் முதல்வன் சமூக வலை தள பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை நீக்கம் செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து நீக்கம் செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டு விட்டன.



இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும்
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில், “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

Related Link
குரலை நசுக்குவது தான் மாற்றமா? உதயநிதி கடிதம்

குரலை நசுக்குவது தான் மாற்றமா? உதயநிதி கடிதம்

          

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

7
2 hrs 45 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved