Also Watch
Read this
தன் இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணிப்பேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறி உள்ளார்.

தவெகவில் மன்சூர்
பிரபல திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அந்தக் கட்சியில் இணைந்தார். இணைப்புக்குப்பின் மன்சூரலிகான் கூறியதாவது;
உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரருமான தவெகவின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் வெங்கட்ராமன், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் மூத்த, பழம்பெரும் தலைவர்களின் முன்னிலையில் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ளேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த இயக்கத்தோடு தான் என் பயணம் தொடரும்.

பிரிந்தால் தானே சேர்வதற்கு?
தவெகவில் நான் இணைய வருகிறேனா? என்று பலரும் கேட்கிறார்கள். 'பிரிந்திருந்தால் தானே மீண்டும் இணைவதற்கு?'. தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, 'லியோ' திரைப்பட வெற்றி விழாவில், நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து, 'தமிழகத்தின் ஒரே மாற்றுத் திறவுகோல், நாளைய தீர்ப்பு விஜய் தான்' என்று நான் அன்றே பிரகடனப்படுத்தியவன். சூழ்நிலை காரணமாக தற்போது தலைவரை நேரில் சந்திக்க இயலவில்லை.

மிகப்பெரும் புரட்சி...
இன்னும் ஓரிரு நாள்களில் அவரை நேரில் சந்திப்பேன். நாளைய தமிழகம், இன்றைய தமிழகம் என எப்போதும் தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், ஆண்டாண்டு காலம் வெற்றியை நோக்கி நடை போடவும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். தமிழக அரசியலில் நிச்சயமாக மிகப்பெரிய புரட்சியை,தவெக ஏற்படுத்தும். தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.
இவ்வாறு மன்சூரலிகான் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved