news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு
tv

Also Watch

tv

Read this

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

வளி மண்டல காற்றழுத்த சுழற்சி

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு

தமிழ்நாட்டில் நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது.

வளி மண்டல காற்றழுத்த சுழற்சி
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;
வடக்கு கேரள பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. வடக்கு லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது.

2 நாட்களுக்கு...
இதன் காரணமாக, தமிழகத்தில் ஜூன் 21, 22 தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 21
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
கோவை
திண்டுக்கல்
தேனி
கன்னியாகுமரி

ஜூன் 22
கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
திண்டுக்கல்
தேனி
மதுரை
சிவகங்கை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்காக...
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 24ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Link
வாட்டர் பிளாண்ட் அருகே தடுப்பணை, விவசாயிகள் ஆவேசம்

வாட்டர் பிளாண்ட் அருகே தடுப்பணை, விவசாயிகள் ஆவேசம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

7
2 hrs 44 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved