தமிழ்நாடு

நயினார் வழக்கை விசாரிக்க ED மறுப்பு

நயினார் வழக்கை விசாரிக்க ED மறுப்பு

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் சுமார் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை வரும் 24ம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரிக்க கோரி சுயேச்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கு சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வராது என அமலாக்கத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இருப்பினும் மனு மீது விரிவாக பதிலளிக்க அவகாசம் வேண்டுமென அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வரும் 24ம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க நீதிபதிகள் அவகாசம் வழங்கியுள்ளனர்.

00 Comments

Leave a comment