தமிழ்நாடு

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை அதிகரிப்பு

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை அதிகரிப்பு

 

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி கோச்சில் பெருச்சாளிகள் தொல்லையால் பயணிகள் அச்சம் - பயணியின் பிரசாத லட்டை கடித்து தின்றதால் மன உளைச்சலுக்கு ஆளான பயணி உடமைகளையும் கடித்துகுதறும் அவலம். எலிகள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்குமா? ரயில்வேதுறை

வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டுவருகின்றது. நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். நாள்தோறும் இந்த ரயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 5 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகளில் அதிகளவிற்கு எலிகள் ஆங்காங்கே சுற்றிதிரிகிறது. இதனால் பயணிகள் கடும் அச்சத்தோடு பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியின் C3 ஏசி பெட்டியில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பெருச்சாளிகள் ஆங்காங்கே சுற்றிதிரிந்துள்ளது.

இந்த பெருச்சாளிகள் பயணிகளின் உடமைகளையும், உணவுப்பொருட்களையும் கடித்து சேதப்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இருந்து நீண்ட நேரம் சிரமப்பட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வாங்கிவரும் லட்டு பிரசாதத்தையும் எலிகள் கடித்து குதறியது. மேலும் பயணி ஒருவரின் பை முழுவதையும் கடித்து பிரசாத லட்டுக்களை கடித்து சேதப்படுத்தியது. இதனால் ரயிலில் பயணித்த பயணி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து பல நாட்களாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் எலித்தொல்லைகள் அதிகளவில் இருப்பதால் பயணிகள். நாள்தோறும் அச்சத்தோடு பயணிக்கும் நிலை உள்ளது.
இதனால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து எலித்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

00 Comments

Leave a comment