தமிழ்நாடு

ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு

ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 681 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி நல்லு ஆகியோர் தலைமையில் மாடுடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். முதல் காளையாக தொட்டப்பநாயனூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து போட்டியாளர்களின் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.
சிறந்த காளைக்கு டாடா ஏஸ் வாகனமும், முதல் 3 இடங்களை பெறும் சிறந்த வீரர்களுக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்ட உள்ளன.

00 Comments

Leave a comment