சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். ராயபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது பைக் மாயமானது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் அருகாமையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மாதவரம் பகுதியை சேர்ந்த 53 வயதான இளஞ்செழியன் என்பவர் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment