தமிழ்நாடு

அரசு பேருந்து படிக்கட்டு திடீரென உடைந்த அதிர்ச்சி சம்பவம் படியில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

அரசு பேருந்து படிக்கட்டு திடீரென உடைந்த அதிர்ச்சி சம்பவம்  படியில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கைக்கு
தினமும் காலை மாலை என நூற்றுக்கு மேற்பட்ட மற்றும் பள்ளி கல்லூரி மாணவ
மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சிவகங்கை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மானாமதுரை
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள்
ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர் மேலும் இந்நிலையில் இன்று பேருந்தில் சில
மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்த நிலையில்
மானாமதுரை ரயில்வே கேட் அருகே பேருந்து சென்ற பொழுது திடீரென படிக்கட்டு
உடைந்து விழுந்ததால் படி கட்டில் பயணம் செய்த மாணவர்கள் கீழே விழபோவதை அறிந்த
மாணவிகள் சிலர் அந்த மாணவர்களை பிடித்து உள்ளே இழுத்தனர் இதனால் பெரும்
உயிரிழப்பு தவிர்க்கபட்டு பேருந்து பாதியில் நிறுத்தபட்டு பேருந்து பஸ்
ஸ்டாண்ட் கொண்டுவர பட்டு படி கட்டுகள் அகற்ற மாற்று பேருந்து மூலம் மாணவர்கள்
அனுப்பி வைக்க பட்டனர்

மானாமதுரை பகுதியில் உள்ள அரசு பேருந்துகள் சரி வர
பராமரிக்க படாத நிலையில் இது போன்று அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக
பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் முன் வைத்துள்ளனர் மேலும் மாணவ மாணவிகள் பயணம்
செய்யும் பேருந்துகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என
கோரிக்கையும் எழுந்துள்ளது.

00 Comments

Leave a comment