தமிழ்நாடு

"அதிமுக மாநாட்டைக் கண்டு அஞ்சியே உதயநிதி இதை அறிவித்துள்ளார்" -இபிஎஸ் பரபரப்பு பேச்சு | EPS

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் போது மத்திய அரசில் கூட்டணியில் இருந்ததும் திமுக தான், தற்போது அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதும் திமுக தான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் வரும் 20ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்றார். அதிமுக மாநாட்டைக் கண்டு அஞ்சியே நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார் என்றும், இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக எடுத்த முயற்சிகளைத்தான் திமுகவும் எடுப்பதாகவும் கூறினார்.

00 Comments

Leave a comment