தமிழ்நாடு

“பாஜக ஒரு பாம்பு... அது இருக்கிற புதர்தான் அதிமுக”.. அமைச்சர் உதயநிதி கடும் விமர்சனம் | DMK

தமிழ்நாட்டிற்கு பாஜக என்கிற கட்சியே தேவையற்றது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே, கலைஞரின் நூற்றாண்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாடு என்ற வீட்டுக்குள் நுழைகின்ற பாம்பு பாஜக என்றும், அது இருக்கின்ற புதர் தான் அதிமுக எனவும் கடுமையாக விமர்சித்தார். ஆட்சியில் இருந்த போது, அதிமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியவர், தமிழகத்தில் நீட் தேர்வு வந்தபிறகு இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

00 Comments

Leave a comment