தமிழ்நாடு

உதயநிதியை பார்க்க சுவர் மீது ஏறிய சிறுவனை தூக்கிச் சென்று கை கொடுக்க வைத்த police|udhayanidhi stalin

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்க்க சுவர் மீது ஏறிய சிறுவனை காவல் துறை அதிகாரி அழைத்து சென்று அமைச்சரிடம் கை கொடுக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சுவர் மீது ஏறி ஐயா வணக்கம் என கூறினான். இதனை பார்த்த காவல் துறை அதிகாரி ஒருவர், சிறுவனை கை கொடுத்து கீழே இறக்கிவிட்டு, அந்த சிறுவனோடு சேர்த்து மேலும் சில சிறுவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அழைத்துச் சென்று கை கொடுக்க வைத்தார்.

00 Comments

Leave a comment