news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்

பிரதமர் வெளிநாடு பயண செலவு 5 மடங்கு அதிகம்

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்

UPI மற்றும் பிற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வழி வகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, கடும் அமளியில் ஈடுபட்டதால், விவாதமின்றி நிறைவேறியுள்ளது.

2021ல் ரூ.36 கோடி, 2025ல் ரூ.180 கோடி செலவு
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 5 மடங்காக உயர்ந்து உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு 36 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில் கடந்தாண்டு 180 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் கூறப்பட்டு உள்ளது.

தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி போராட்டம்
ஜார்க்கண்ட்டில், JPSC தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். கடந்த 13 நாட்களாக இவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், சட்டமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரல் கொடுப்போம் - கார்கே
ஜார்க்கண்ட் மாநிலத்தில் JPSC-JSSC தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெறும் மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’மாணவர்களின் கோரிக்கைக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும்’ என்றார்.

மக்கள் பிரச்சினைகளில் கவனம்
தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கு பதிலாக, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் இயக்கமாக செயல்பட உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்து உள்ளது. மேலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நேரில் அறிய நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக சி.ஜே.பி. தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

த.வெ.க. அரசு அரசியல் நாடகம் என கனிமொழி விமர்சனம்

8
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved