news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதி என ஸ்டாலின் புகழாரம்

8ஆம் ஆண்டு நினைவு நாள்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.

கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு தினம்
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
எண்பது ஆண்டுகால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அரை நூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர். ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர். 13 முறை சட்டமன்ற உறுப்பினர். தமிழகத்தின் முதல்வராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர். அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர்.

அவர் தான் நமக்கு எல்லாம்
நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும் சமூக வலைதளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை.

ருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கருணாநிதி, உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று. அவர்தான் நமக்கு எல்லாம். அவரின்றி நாம் இல்லை.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

அமைதி பேரணி
கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு , துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, நடைபெற்றது. சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'டேர்டெவில்' படத்தின் ப்ரீ-பிசினஸ், எகிறும் எதிர்பார்ப்பு

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau