news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

'டேர்டெவில்' படத்தின் ப்ரீ-பிசினஸ், எகிறும் எதிர்பார்ப்பு

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டிரெய்லர்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரப்போகிறது தமிழ்ப்படம் 3
2018ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம்-2க்குப் பிறகு, சினிமாவும் அரசியலும் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து உள்ளன. இதனால் தமிழ்ப்படம்-3 மூலம் இயக்குநர் சி.எஸ்.அமுதனும், நடிகர் சிவாவும் இன்னும் பெரிய அளவில் காமெடி விருந்து படைக்க உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

குறிப்பாக KGF, Pushpa போன்ற பான்-இந்தியா வெற்றிப்படங்கள், ஸ்பை மற்றும் ஏஜென்ட் வகை திரைப்படங்கள், புராண மற்றும் கடவுள் சார்ந்த கதைகள், லோகேஷ் கனகராஜ் பாணி கேமியோ யுனிவர்ஸ், துப்பாக்கி ஆக்சன், விண்டேஜ் லுக், நெல்சனின் தனித்துவமான காமெடி ஸ்டைல் என, சமீபத்திய சினிமா டிரெண்ட் அனைத்தும் இந்த முறை கலாய்ப்புக்கு உள்ளாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

'டேர்டெவில்' படத்தின் ப்ரீ-பிசினஸ்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'டேர்டெவில்' திரைப்படத்தின் மொத்த ப்ரீ-பிசினஸ் மதிப்பு 175 கோடி ரூபாய் முதல் 185 கோடி ரூபாய் வரை இருக்கும் என தொழில்துறை ஆய்வாளர்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் கணித்து உள்ளனர். அஜித்தின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக 'குட் பேட் அக்லி' இருப்பதால், அந்த படத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டே 'டேர்டெவில்' படத்தின் ப்ரீ-பிசினஸ் மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும், கேரளா திரையரங்க உரிமை 1.5 கோடி ரூபாய் வரை செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் OTT உரிமை அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் வரை விற்கப்படும் என கூறப்படுகிறது. சாட்டிலைட் உரிமைகள் 30 கோடிக்கு விற்பனையானால் அதுவே புதிய சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டிரெய்லர்
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

குடும்பம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பண வசூல், பூசிமெழுகும் அதிகாரிகள், செய்தியாளரிடம் சீறிய இன்ஸ்பெக்டர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau