news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

எனக்கு நடந்த கொடுமை, மனம் திறந்த அதிதி ஷர்மா

சூர்யா குறித்து மாதவன் நெகிழ்ச்சி

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராக்கெட்ரி - சூர்யா, ஷாருக்கான் கேமியோ
'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் கேமியோவில் நடித்தது எப்படி நடந்தது? என்பது குறித்து நடிகரும் இயக்குநருமான மாதவன் மனம் திறந்து பேசி உள்ளார்.

ராக்கெட்ரி படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க, தான் சூர்யாவை அணுகியதாகவும், அப்போது சூர்யாவிடம்,'நீங்கள் தமிழ் பதிப்பில் நடித்தால், இந்தி பதிப்பில் ஷாருக்கானை நடிக்க வைக்கிறேன்,' என்று சொன்னேன். அதுக்கு சூர்யா என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்வில்லை. 'எப்போது படப்பிடிப்புக்கு வர வேண்டும்? எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும்?,' என்று மட்டும் கேட்டார் என, மாதவன் நெகிழ்ச்சி உடன் கூறி உள்ளார்.

எனக்கு நடந்த கொடுமை
காதலித்து திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே தன்னை மன ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக, பிரபல சின்னத்திரை நடிகை அதிதி ஷர்மா மனம் திறந்து பேசி உள்ளார். பிரபலமான சின்னத்திரை நடிகை அதிதி ஷர்மா, தனது கணவர் அபினீத் கௌஷிக் மற்றும் மாமியார், மாமனார் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

தன் காதல் கணவர் அபினீத் கௌஷிக் குடும்ப வன்முறை, தாக்குதல், பல வகையிலும் மிரட்டல் என, வெளியே சொல்ல முடியாத அளவுக்கு தன்னை துன்புறுத்தி வந்ததாக கூறி உள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டு செல்போனை கூட சோதித்ததாகவும், ஒரே வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி தனி அறையில் அடைத்து வைத்து இருந்ததாகவும் கூறியது, அவரது ரசிகர்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாத்தி - DHANUSH BLOCK
’வாத்தி’ படத்தில், ஏழை மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து அவர்களை படிக்க வைக்க உதவுகிற மாதிரி தனுஷ் நடித்துள்ளார். அது என்ன தான் சினிமா என்றாலும், நிஜத்திலும் அப்படி ஒரு சம்பவத்தை நடிகர் தனுஷ் செய்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

நடிகர் தனுஷ், சென்னை கேகேநகரில், தான் படித்த தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில், தனது சொந்த செலவில், புதியதாக 3 மாடி கட்டிடத்தை கட்டிக் கொடுத்து அதனை தானே திறந்தும் வைத்து, அசத்தி உள்ளார். தானாகவே முன்வந்து பள்ளிக் கட்டிடத்தை கட்டிக்கொடுக்க தனுஷ் உதவிய நிலையில், பள்ளி நிர்வாகம் இந்த கட்டிடத்திற்கு DHANUSH BLOCK என அவரோட பெயரையே வைத்து, மகிழ்ந்து உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பண வசூல், பூசிமெழுகும் அதிகாரிகள், செய்தியாளரிடம் சீறிய இன்ஸ்பெக்டர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau