Also Watch
Read this
By: Manigandan Raja

2024-ல் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என நினைத்திருந்ததாகவும், ஆனால், தற்போதைய முதலமைச்சரும், நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய்தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டடத்தை திறந்து வைக்க உள்ளதாக தாம் அவரிடம் முன்னரே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கட்டட பணிக்காக நடிகர் விஜய் 2024-ல் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
"தி பாரடைஸ்" திரைப்படம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு
நடிகர் நானி நடித்துள்ள "தி பாரடைஸ்" திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, சோனாலி குல்கர்னி, மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1980-களின் கதைக்களத்தை கொண்டுள்ள இந்த படம், செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகம், அமைப்பு ரீதியான அடக்குமுறையை எதிர்த்து குடியுரிமைக்காக போராடுவதை காட்டுகிறது. பான் இந்திய படமாக உருவாகியுள்ள தி பாரடைஸ், செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நயன்தாரா, கவின் நடித்துள்ள "ஹாய்" திரைப்படம்
நடிகை நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள "ஹாய்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது விஷாலின் "மகுடம்" மற்றும் சூர்யாவின் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" ஆகிய திரைப்படங்கள் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

எனவே, திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், புதிய வெளியீட்டு தேதியை இறுதி செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved