news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

விநோத கிணற்றை பார்க்க படையெடுக்கும் மக்கள்

அலை அடிக்க தொடங்கியது.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவசாய கிணறு

கடல் போல் அலை அடித்தப்படி இருக்கும் விவசாய கிணறு 

குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்று, கடலில் அலை அடிப்பது போல் தொடர்ந்து அசைந்தபடி இருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. மோர்பி மாவட்டம் விர்பர்தா ((Virparda )) கிராமத்தில் உள்ள கிணற்றில், கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதே போல் அலை அடித்த நிலையில், படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பியது.

பின்னர் வியாழக்கிழமை மதியம் மீண்டும் அந்த கிணற்றில் அலை அடிக்க தொடங்கியது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், ஏராளமானோர் கிணற்றை பார்க்க படை எடுத்து வருகின்றனர். இதனிடையே கிணற்றை பார்வையிட்ட நிலவியல் வல்லுநர்கள், நீருக்கு அடியில் அடைபட்டிருக்கும் காற்று அசைவதாலேயே மேற்பரப்பில் அலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

மூவற்றுப்புழா பகுதியில் திடீர் மண்சரிவு 

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவற்றுப்புழாவில் தனியாருக்குச் சொந்தமான கைவிடப்பட்ட குவாரியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் ஆற்றில் விழும் காட்சி வெளியாகியுள்ளது. கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மராடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக தனியாருக்குச் சொந்தமான கைவிடப்பட்ட குவாரி ஒன்றில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில், விவசாய நிலங்கள் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Related Link
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற திலீப் காவிட் அவமதிப்பு

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற திலீப் காவிட் அவமதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விநோத கிணற்றை பார்க்க படையெடுக்கும் மக்கள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved