news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஜப்பானில் அறுவைச் சிகிச்சையின்போது ஏற்பட்ட நிலநடுக்கம்

நோயாளியை காத்த மருத்துவர்கள்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிலநடுக்கம்

நிலநடுக்கம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி 

ஜப்பானில் அறுவைச் சிகிச்சையின்போது ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூலை 28-ம் தேதி ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கும் ஏற்பட்டபோது, குமாமோட்டோவிலுள்ள ஜெனரல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில், மருத்துவமனை கட்டடமே பயங்கரமாக குலுங்கியது. அப்போது, மருத்துவ உபகரணங்கள் இங்கும் அங்குமாக தள்ளாடிய நிலையில், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேஜையை பிடித்துக் கொண்டு நோயாளியை பாதுகாத்த வீடியோ வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான், துருக்கி, சவூதி இடையே முத்தரப்பு ஒப்பந்தம் 

பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மெக்கா ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தப்படி, NATO அமைப்பைப் போலவே இந்த மூன்று நாடுகளின் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது அனைத்து தரப்பினரின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு இணைந்து பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் இந்த மூன்று முக்கிய நாடுகள் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய வம்சாவளி பிஎச்.டி மாணவர் சடலமாக மீட்பு 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனியாக மலையேற்ற பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளி பிஎச்.டி மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் பிரிவில் பிஎச்டி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயி, கலிபோர்னியாவில் உள்ள பிக் பைன் லேக்ஸ் பகுதியில் தனியாக மலையேற்றத்திற்கு சென்றபோது மாயமானார்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் குற்றச்செயல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Link
அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு

அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விநோத கிணற்றை பார்க்க படையெடுக்கும் மக்கள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved