news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு
tv

Also Watch

அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு

அமெரிக்க அரசு தடை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph 3

புதிய நிர்வாக உத்தரவுகளில் அதிபர் டிரம்ப் கையெழுத்து 

அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவுகளில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் உத்தரவை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. இந்த சூழலில், புதிய நிர்வாக உத்தரவு மூலம் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை தடை செய்யும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை சிறையில் கைதிகளுக்குள் மோதல் 

இலங்கை சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குருவிட்டா சிறையில் கைதிகளிடம் இருந்த போதைப்பொருள் காரணமாக மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் நடந்த 2-வது சிறைச்சாலை மோதல் இதுவாகும். நேற்று இரவு கொழும்பு மத்திய சிறையில் சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர். தற்போது 2 சிறைகளிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரஷ்ய கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்ய எல்லைப் பகுதியில் இருந்து 2ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில்(Yekaterinburg) நகரில் உள்ள வைல்ட்பெர்ரீஸ் நிறுவனத்தின் பெரிய கிடங்கு மீது தாக்குதலை நடத்தியதில், அம்மையம் தீப்பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Related Link
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடைபயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடைபயணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விநோத கிணற்றை பார்க்க படையெடுக்கும் மக்கள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved