Also Watch
Read this
By: Manigandan Raja

அனில் மேனன், ஜெசிகா மெய்ர் 6.27 மணி நேரம் நடைபயணம்
நாசா விண்வெளி வீரர்களான அனில் மேனன் மற்றும் ஜெசிகா மெய்ர் ((Jessica Meir ))ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே 6 மணி 27 நிமிடங்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டனர்.
மேனனும் மெய்ரும் "குவெஸ்ட்" காற்றுப் புகா அறையிலிருந்து வெளியேறி, சூரிய மின் தகடு வழித்தடத்திற்கான கருவித் தொகுப்பைப் பொருத்தி வெளிப்புறக் கட்டமைப்பு மேம்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். வியாழக்கிழமை காலை 8:33 முதல் பிற்பகல் 3:00 வரை நீடித்த இந்த 281-வது விண்வெளி நடைபயணமானது, மெய்ருக்கு 6-வது மற்றும் மேனனுக்கு முதல் நடைப்பயணம் ஆகும்.
பாகிஸ்தானில் மேகவெடிப்பினால் திடீர் வெள்ளப்பெருக்கு
பாகிஸ்தானில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காட்சிகள் வெளியாகியுள்ளன. கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ரால் ((Chitral)) மாவட்டத்தின் கரிமாபாத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, சேறும் சகதியுமாக பெரிய பாறைகளையே அடித்துச் சென்றது.

அதே போல் Shishi koh பள்ளத்தாக்கில் சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved