news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

சீனாவில் 2,300 ஆண்டுகள் பழமையான பீர் கண்டுபிடிப்பு

வெளிர் நீல-பச்சை நிறத்திரவம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China beer

கல்லறையில் இருந்து மீட்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த பீர் 

சீனாவில் வெண்கல பாத்திரத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட, 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான பீர் மதுவகையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நிங்சியா ஹுய் ((Ningxia Hui )) தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஷான்ஜியாபாவோ ((Shanjiabao)) கல்லறையில் உள்ள சின் காலக் கல்லறையிலிருந்து மீட்கப்பட்ட பாத்திரத்தில், ஒரு கேலனுக்குச் சமமான சுமார் 3.74 லிட்டர் அளவு வெளிர் நீல-பச்சை நிறத்திரவம் இருந்துள்ளது.

அந்த திரவத்தை அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்ததில், 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கரிமச் சேர்மங்கள், மாவுச்சத்து துகள்கள், பைட்டோலித்கள் மற்றும் ஈஸ்ட் எச்சங்கள் கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆவியாதல் மற்றும் மாசுபடுதலில் இருந்து மதுவை பாதுகாக்கும் வகையில் வெண்கல பாத்திரம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130ஐ கடந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவான நிலையில் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி 132 பேர் உயிரிழந்த நிலையில் 570க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

Related Link
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை சீராக உள்ளது

மொஜ்தபா கமேனியின் உடல்நிலை சீராக உள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் தர்ணா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved