news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

பிஃபா தலைவருக்கு எதிராக போர்க்கொடி

டிரம்ப் எச்சரித்துள்ளார்.

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிஃபா தலைவருக்கு டிரம்ப் ஆதரவு

பல கால்பந்து கூட்டமைப்புகள் போர்க்கொடி WCல் தனியார் முதலீட்டை கொண்டு வரும் திட்டம்

FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்கினால், அது மிகப்பெரிய தவறாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளின் வணிக உரிமைகளில் தனியார் முதலீட்டை கொண்டு வரும் இன்ஃபான்டினோவின் திட்டத்திற்கு பல கால்பந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த திட்டம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் இன்ஃபான்டினோவுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இன்ஃபான்டினோவுக்கு ஆதரவாக டிரம்ப் குரல் கொடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையலாம் 

இனிவரும் காலங்களில் ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையலாம் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டி20 கிரிக்கெட் தொடங்கப்பட்டபோது.

டெஸ்ட் கிரிக்கெட் மீதான அழுத்தம் அதிகரிக்கப்போவதாக கூறப்பட்டதாகவும், ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறையவில்லை எனவும் தெரிவித்தார். அதேசமயம், ஒருநாள் கிரிக்கெட் ஆபத்தில் உள்ளதாக தாம் நினைப்பதாகவும், ஒருநாள் போட்டிகள் இல்லாத கிரிக்கெட்டை யோசித்து பார்க்கவே கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் U-15 அணியின் தலைமை பயிற்சியாளர்

இந்தியாவின் U-15 அணியின் தலைமை பயிற்சியாளராக Bibiano Fernandes தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் அணிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகச் சிறந்த பயிற்சியாளராகக் கருதப்படும் ரஞ்சித் பஜாஜுக்கு, U-15 அணியின் மேலாளர் பொறுப்பை ஏற்க அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது.

இருப்பினும், Bibiano Fernandes-உடன் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் அப்பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Related Link
இலங்கை அணியின் முக்கிய பேட்டர்கள் கயத்தால் அவதி

இலங்கை அணியின் முக்கிய பேட்டர்கள் கயத்தால் அவதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: திருப்பூர் அணி வெற்றி

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved