Also Watch
Read this
By: Manigandan Raja

தலைவராக கடந்த 2017 முதல் பதவி வகித்து வந்தவர்
டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த என். சந்திரசேகரன் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பதவி நீட்டிப்புக்கு நிர்வாகக் குழுவில் ஒருமித்த ஆதரவு கிடைக்காததால், பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.

மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, தனது மகன் நெவில் டாடா நிறுவனத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்க வேண்டும் என்று விரும்புவதால், சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை எதிர்ப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved