Also Watch
Read this
By: Manigandan Raja

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று ராமலிங்க
சௌடேஸ்வரி அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதனிடையே இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு பிச்சனூர் பேட்டையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து பால் கூடம் ஊர்வலம் தொடங்கியது அப்பொழுது அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் உற்சவர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்பொழுது கோலாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடைபெற்றது அப்பொழுது பக்தர்கள் கூர்மையான கத்திகளால் தனது உடம்பை காயப்படுத்தி அம்மனுக்கு ரத்த காணிக்கை செய்து வினோத வழிபாடு மேற்கொண்டனர் இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கத்தி போடுதல் நிகழ்வில் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் இவ்வாறு செய்வதால் செல்வம், கல்வி, உடல்நிலை ஆரோக்கியம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved