Also Watch
Read this
By: Manigandan Raja

ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்மா'
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் 'அய்யய்யோ அம்மாடி' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விவேக் வரிகளில் தமன் இசையில் யுவன் சங்கர் ராஜா, தமன், சஞ்சனா ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா', விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விக்ரமிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை
அரிய வகை, 'லார் கிப்பன்' குரங்கை நடிகர் விக்ரம் வீட்டில் வைத்திருத்த விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அரிய வகை லார் கிப்பன் குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட பின் உடனே டெலிட் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் குரங்குடன் ஏன் வீடியோ எடுத்தீர்கள்? சமூக வலைதளத்தில் பதிவிட்ட பின் வீடியோவை டெலிட் செய்ததற்கான காரணம் என்ன? அந்த குரங்கு எப்படி வந்தது? என்பது குறித்து கேள்விகள் கேட்டு, எழுத்துப்பூர்வமாக பெற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved