news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தற்கொ*ல செய்ய முயன்றவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர்

கோபுராஜபுரம், தஞ்சாவூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கேட் கீப்பர்

உத்திரபிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டம், கிரித்தால் பகுதியை சேர்ந்தவர் சுதீர்குமார் மகன் ராகுல் (30) இவர் தஞ்சாவூர் மாவட்டம் கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆகிறது.

இந்நிலையில் இவர் வழக்கம் போல் கேட் கீப்பாராக பணியில் வேலை செய்து வந்தார். அப்போது நாகர்கோயிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தோதியா எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் கோபுராஜபுரம் ரயில்வே கேட் பகுதியை நோக்கி வந்தது.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்த உத்திரபிரதேசம் மாநிலத்தைச்
சேர்ந்த கேட் கீப்பர் ராகுல் உட்பட இருவரும் ரயிலில் அடிபட்டு சுமார் 500-மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த கும்பகோணம் ரயில்வே போலீஸ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்று உயிரிழந்த ரயில்வே ஊழியர் கேட் கீப்பர் ராகுலுக்கு 6-மாதத்திற்கு முன்பு நடைபெற்ற திருமண பத்திரிக்கையும், அவரது படமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Link
மினி ஸ்டேடியம் நிச்சயம் வரும்.! போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் உறுதி..!

மினி ஸ்டேடியம் நிச்சயம் வரும்.! போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் உறுதி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவை மெட்ரோ திட்டத்திற்கு விரைவில் புதிய DPR

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved