Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே திருப்பதியாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (32).அவரது தம்பி கல்யாணசுந்தரம் (30). இவர்கள் இருவரும் அதிகாலை பாபநாசத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனத்தை முத்துக்குமார் ஓட்டினார். வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த கரடி சாலையை கடக்க உயர்ந்தது இதில் எதிர்பாராத விதமாக கரடி இருசக்கரம் ஒட்டிவந்த முத்துக்குமாரை தாக்கியது.

இதில் பைக் கவிழ்ந்து முத்துக்குமாரும், கல்யாணசுந்தரமும் கீழே விழுந்தனர். கரடி தாக்கியதில் முத்துக்குமாருக்கு முகம், தோள் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து
அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் வி.கே.புரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாபநாசம் பகுதியில் மூன்று கரடிகள் கூண்டில் சிக்கி அவைகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். மேலும் கரடி தாக்கி ஒருவர் இறந்துள்ளார். இந்நிலையில் இன்று கரடி தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved