news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

திருவாரூர்

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr 02

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. திருவாரூர் நன்னிலம் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்த நிலையில் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் ஏழு சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்த சூழலில் நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தல் சன்னாநல்லூர், மாப்பிள்ளை குப்பம், பூந்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 500 ஏக்கர் கோடை சாகுபடி நெற்பயிர்கள் மழை காரணமாக சாய்ந்தன.

தொடர்ந்து வயலில் தேங்கிய மழை நீரில் தற்போது நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. மும்முனை மின்சாரம் பற்றாக்குறை, எல் நினோ போன்ற இயற்கை மாற்றத்தால் அதிகரித்த கோடை வெயில் இவற்றால் ஏற்பட்ட வறட்சி உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்த கோடை நெல் சாகுபடியை செய்து முடிக்க ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 வரை விவசாயிகள் செய்து செலவு செய்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் பரவலாக அறுவடை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைத்திருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திப்பாராவில் முடங்கும் போக்குவரத்து, 50 மீட்டருக்கு பதில் 5 கிமீ சுற்றும் நிலை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved