news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்வு

ராமேஸ்வரம்

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmp 002

ராமநாதசுவாமி கோவிலின் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்து சென்றனர்.

அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், தீர்த்த மூர்த்தி ஸ்தலம் இப்படி முப்பெருமைகளை கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மற்றும் மாசித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம், இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை,மாலை என அம்பாள் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார், இந்த ஆடி திருக்கல்யாணத்தின் முக்கிய விழாவாக ஆடி அமாவாசை, திருத்தேரோட்டம்,இரவு வெள்ளி ரதம் என முக்கிய விழாக்கள் நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து இன்று ஆடிதபசை முன்னிட்டு திருக்கோவில் அதிகாலை 2 மணியளவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிலிங்க பூஜையும், அதனைத் தொடர்ந்து 6 மணி வரை பக்தர்கள் புனித நீராட தீர்த்த கிணறு திறக்கப்பட்டு பக்தர்கள் நீராடினர் , நீராடி பக்தர்கள் அனைவரும் காலை 6 மணி வரை சாமி தரிசனம் செய்தனர், அதனைத் தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினால், அதைத் தொடர்ந்து பகல் 11 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி தபசு மண்டப படிக்கு எழுந்தருளினர். 

பின்னர் 3மணிக்கு மேல் 3.30 மணிக்குள் தவசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது, முன்னதாக சுவாமியை அம்பாள் மூன்று முறை சுற்றி வலம் வந்து வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரணை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். மாலை மாற்றுதல் நிகழ்வு நிறைவடைந்து மீண்டும் சுவாமி அம்பாள் கோவிலுக்கு எழுந்தருளினர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும், அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் அம்பாள் வீதி உலாவும், நாளை இரவு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆஃபரை அறிவித்துள்ளது BSNL நிறுவனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved