news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கண்துடைப்பாக கிராமசபை கூட்டம் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு

சிறை பிடித்தனர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் தொடங்கும் முன்பே அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் ஒரு சில அதிகாரிகளை வைத்து நடத்தக்கூடாது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்க மறுத்த பிடிஓவிடம் வாக்குவாதம் ஏற்பட்டு சிறைபிடித்தனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். குறைந்த பொதுமக்களை வைத்து கூட்டம் நடைபெற்றது.

காங்கேயம் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கும் முன்பு தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.

கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் 100 நாள் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை வைத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றதாகவும், அது போல் இல்லாமல் பொதுமக்களை திரட்டி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையும் 100 நாள் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியவை கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தும் முயற்சி செய்தனர்.

அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகளுக்கும் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் (பிடிஓ) வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிடிஓ 100 நாள் பணியாளர்களிடம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என கூறவே 100 நாள் வேலைத்திட்ட பெண்கள் ஆவேசமடைந்து விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பிடிஓவை முற்றுகையிட்டு சிறை பிடித்தனர். அங்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டத்தில் முறையாக நடைபெறுவதில்லை உரிய துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை கண்துடைப்புக்காக ஒரு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக ஆவேசம் அடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்த ஒரு சில மக்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை வைத்து காவல்துறை மற்றும் பிடிஓ, வருவாய் துறையினர், ஆகியோர் கூட்டத்தை நடத்தி முடித்து இறுதியில் உறுதி மொழியும் ஏற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருத்தேரோட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved